செம போல்ட் ஆன கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளியான ‘கொன்றால் பாவம்’ படத்தில் நடித்த பிறகு அதே இயக்குனருடன் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வரலட்சுமி சரத்குமார் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டார்.
என்னதான் வரலட்சுமி சரத்குமார் டாப் நடிகர்களின் படங்களின் நடித்து வந்தாலும் சிறிய பட்ஜெட் படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களிலும் வில்லியாகவும் நடித்து மிரட்டி வருகிறார். அவர் நடித்திருக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் அது தொடர்பான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதில் வரலட்சுமி இடம் ஏடாகூடமான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில் அப்பாவுடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தின் நடிப்பீர்களா? என்று கேட்டதும் அவருக்கு சுர்ருனு கோபம் தலைக்கேறி பத்ரகாளியாக மாறி கத்திவிட்டார். ஏனென்றால் படமாக இருந்தாலும் பெத்த தகப்பனுடன் எப்படி ஜோடி போட்டு நடிப்பது என்று வரலட்சுமி டென்ஷன் ஆகிவிட்டார். ஆனால் செய்தியாளர் அந்த கேள்வியை அப்படியே மழுப்பி, ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிப்பீர்களா? என்று கேட்டார்.
ஏற்கனவே விஜய்க்கு வில்லியாக சர்கார் படத்தில் நடித்துவிட்ட வரலட்சுமி, ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகையாக இருக்கும் அவர், இந்த ரோல் பண்ண மாட்டேன் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார் என்று சவால் விட்டிருக்கிறார்.
மேலும் தற்போது சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் ஆக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்து கலக்கினார். அது மட்டுமல்ல விஜய்யின் வாரிசு, ராகவா லாரன்சின் ருத்ரன், வெங்கட் பிரபுவின் கஸ்டடி என வரிசையாக இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் வெளிவந்தது.
இன்னும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இவர் கைவசம் இருக்கிறது. இப்படி சினிமாவில் படு பிஸியாக இருக்கும் சரத்குமார் உடன் அவர் மகள் இணைந்து எப்போது நடிப்பார் என்ற ஆவலில் தான் செய்தியாளர் கேட்டிருக்கிறார். அது ஜோடியாக இல்லை. வேறு ஏதாவது காம்பினேஷனில் நடிக்க வேண்டும் என்று செய்தியாளர் மட்டுமல்ல ரசிகர்களும் விரும்புகின்றனர்.