வடக்கன்களை புரட்டி எடுக்க போகும் இயக்குனர்.. வித்தியாசமான தொழில்நுட்பத்தில் உருவாகும் படத்தின் போஸ்டர்

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் அவ்வப்போது ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திடீரென்று பயங்கரமாக ட்ரெண்ட் ஆகிவிடும். இதற்கு காரணம் ஒன்று அந்த படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் அல்லது ஏதாவது புதிதாக தொழில்நுட்பம் அந்தப் படத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு இருக்கும். இதனால் தான் அந்த படங்கள் வைரலாகும்.

அந்த வகையில் தான் இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்க இருக்கும் திரைப்படமும் இப்போது பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாஸ்கர் சக்தி மிகப் பிரபலமான எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் இயக்குனராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். படத்தின் தலைப்பிலேயே எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்றே சொல்லலாம்.

புதுமுக நடிகர்களான குங்குமராஜ் மற்றும் வைரமாலாவை கதாநாயகன், கதாநாயகியாக வைத்து பாஸ்கர் சக்தி இயக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு ‘வடக்கன்’. தற்போது தமிழ்நாட்டில் இந்த ‘வடக்கன்’ என்ற சொல் பயங்கர ட்ரெண்டில் இருக்கும் ஒன்று என அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இவர் இந்த படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவர்ந்திழுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும் இன்று முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் சுசீந்திரன் தொடங்கி வைத்திருக்கிறார். ‘வடக்கன்’ திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது மேலும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஜனனி என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

‘வடக்கன்’ படத்தின் கதை என்ன என்று இதுவரை தெரியவில்லை என்றாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு ரயில் வண்டியில் இளைஞர்கள் படிகளில் தொங்கியபடி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிப்பது போல் இருக்கிறது. இதை வைத்து இன்றைய எதார்த்தமான தமிழ்நாட்டின் சூழ்நிலையை தான் இயக்குனர் பாஸ்கர் சக்தி இந்த படத்தில் பேசப் போகிறார் என்பது நன்றாக தெரிகிறது.

படத்தின் தலைப்பிலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி. முழுக்க முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்தே இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும் வடக்கன் திரைப்படம் சிங்க் சவுண்டு என்னும் நேரடி ஒலிப்பதிவு தொழில்நுட்பத்துடன் உருவாக இருக்கிறது.