Maaveeran: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மாவீரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் அவர் பிரின்ஸ் பட தோல்வியை ஈடு கட்டி விட்டார் என்று கூறப்பட்டாலும் சில விஷயங்களை இயக்குனர் சொதப்பி இருப்பது கண்கூடாக தெரிகிறது.
அந்த வகையில் தொடை நடுங்கியாக இருக்கும் ஹீரோ வீரனாக மாறுவதுதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. அதில் சிவகார்த்திகேயன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆவது போல் தோன்றுகிறது. அதன் காரணமாகவே படத்தில் யோகி பாபுவே நடித்திருக்கலாம் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது.
ஏனென்றால் மண்டேலா படம் யோகி பாபுவுக்கு இன்றுவரை பேர் சொல்லும் படமாக இருக்கிறது. அதனால் இயக்குனர் இந்தப் படத்திலும் அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் யோகி பாபு தான் இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அவருடைய கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் கதையின் போக்கில் அவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்களால் தியேட்டரே சிரிப்பலையில் களை கட்டியது. இதனால் தான் ரசிகர்கள் இயக்குனர் சிவகார்த்திகேயன் அளவுக்கு போகாமல் யோகி பாபுவை வைத்து படத்தை முடித்து இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஹீரோயின் கேரக்டர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது.
அதேபோன்று இரண்டாம் பாதியும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கிளைமாக்ஸ் காட்சிகள் தான் இப்போது விவாதமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ரசிகர்களுக்கு புரியும் படியான கிளைமாக்ஸை கொடுக்க தவறிவிட்டார்.
இப்படிப்பட்ட சொதப்பலான விஷயங்கள் மாவீரனில் எக்கச்சக்கமாக இருக்கிறது. அந்த வகையில் படம் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும் சில கற்பனைக்கு மீறிய விஷயங்கள் பல கேள்விகளை முன் வைக்கின்றது. அந்த வகையில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.