வேற லெவலில் பட்டையை கிளப்பும் யோகி பாபு.. ஜவான் படத்தில் அதிகப்படியாக வாங்கிய சம்பளம்

Actor Yogibabu: தமிழ் சினிமாவில் தற்போது யோகி பாபு என்ட்ரி இல்லாமல் எந்த படமும் வராது, என்ற நிலைமை ஆகிவிட்டது. அதனாலேயே முன்னணி நடிகர்களை விட அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பேச்சிலேயே நக்கல் கலந்த நகைச்சுவை தான் இருக்கிறது. அத்துடன் ஹீரோக்கு இணையான பேரையும் புகழையும் சம்பாதித்து விட்டார்.

சமீபத்தில் வெளிவந்த மாவீரன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோ ரேஞ்சுக்கு பேசும் படியாக நடிப்பு இருந்தது. இப்படி ஒரு பக்கம் இவருடைய டிராக் போய்கிட்டு இருந்தாலும், மறுபக்கம் கதையின் நாயகனாகவும் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் படங்களில் மட்டுமின்றி ஹிந்திலும் ரவுண்டு அடித்து வருகிறார். ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் கூட நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் ஜவான் படத்தில் இவருடைய நடிப்புக்காக அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் கிட்டத்தட்ட 50 லட்சம்.

மேலும் இப்படம் ஆக்சன் காட்சிகளோடு ஒரு கமர்சியல் படமாக ட்ரைலர் முலம் வெளியாகி உள்ளது. இதில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படுவதை தொடர்ந்து இன்னும் அதிகமாகவே பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வரும். தற்போது யோகி பாபு வேற லெவலில் ஆல் ரவுண்டராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களான அயலான், எல்ஜிஎம் கங்குவா, அரண்மனை 4, சதுரங்க வேட்டை 2, அந்தகன் போன்ற பல படங்களில் கமிட்டாகி உள்ளார். இப்படி நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இன்னும் போகப் போக இவருடைய மார்க்கெட் ரேட் கூடிக் கொண்டே தான் வரும்.