Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

நடிப்பு அரக்கன்கள் இணையும் OM.. முக்கிய அப்டேட்

நடிப்பு அரக்கன்கள் இணையும் OM.. முக்கிய அப்டேட்

அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் OM திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார். மம்மூட்டி இப்படத்தில் பர்மா கார்த்திகேயன் என்னும் நிழல் உலக தாதாவாக நடிக்கிறார்.

சாய் பல்லவி முதன்முறையாக நேர்மையான சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ‘வீழா வீரா’ பாடல் வெளியாகி 27 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் படு வைரலானது.

மேலும், மம்மூட்டியின் மாஸ் என்ட்ரி டீசர் வெளியாகி யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, மலையாள நடிகர் ஒருவரின் தமிழ் அறிமுக டீசலுக்கான புதிய சாதனையைப் படைத்துள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளைக் குவித்து வரும் நிலையில், வரும் நவம்பர் 20ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.