Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சூரிக்கு ஜோடியான பொன்னியின் செல்வன் ஹீரோயின்.. ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய கருடன்

சூரிக்கு ஜோடியான பொன்னியின் செல்வன் ஹீரோயின்.. ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய கருடன்

Soori: சூரி இப்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். வெற்றிமாறனின் விடுதலை மூலம் கதையின் நாயகனாக இவர் தன் முதல் படியை எடுத்து வைத்தார். அது வொர்க் அவுட் ஆன நிலையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கருடன் அவரின் […]

Soori: சூரி இப்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். வெற்றிமாறனின் விடுதலை மூலம் கதையின் நாயகனாக இவர் தன் முதல் படியை எடுத்து வைத்தார்.

அது வொர்க் அவுட் ஆன நிலையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கருடன் அவரின் அந்தஸ்தை உயர்த்தியது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி வெளியானது.

இது சர்வதேச அளவில் பல விருதுகளை தட்டி தூக்கியது. அதன் பிறகு விடுதலை 2 ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. அதற்கு முன்பு அவருடைய அடுத்த படம் பற்றிய செய்தியும் வெளியானது.

ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய கருடன்

அதாவது விலங்கு வெப் தொடர் மூலம் கவனம் பெற்றவர்தான் இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ். அவருடைய இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அந்தப் படத்தில் தான் இவருக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் நடிகை நடிக்க உள்ளார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அதன்படி பூங்குழலியாக வந்த ஐஸ்வர்யா லட்சுமி கட்டா குஸ்தி படத்திலும் கலக்கி இருந்தார். இது தமிழில் அவருக்கான இடத்தை கொடுத்தது.

அதைத் தொடர்ந்து தற்போது சூரி உடன் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு அழுத்தமான வேடம் என கூறப்படுகிறது.

இப்படியாக ஹீரோ அந்தஸ்தை இன்னும் உயர்த்தி இருக்கிறார் சூரி. அடுத்த வருடமும் இதே போல் அவர் நிறைய படங்களை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் இப்போது வாழ்த்துகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.