நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டிருப்பது மீண்டும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ திரைப்படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது.
அப்போது இந்தத் தலைப்புக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தப் பெயர் தென் மாவட்டங்களில் சாதியப் பதற்றத்தையும் மோதல்களையும் உருவாக்கக்கூடும் என்ற அச்சம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அந்தத் தலைப்பு கைவிடப்பட்டு ‘விருமாண்டி’ எனப் பெயர் மாற்றப்பட்டது.
ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரைத் தனது படத்திற்குத் தேர்வு செய்திருக்கிறார் கமல்ஹாசன்.
அன்றைக்கு எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்ட ஒரு தலைப்பை, இன்று மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இது வெறும் திரைப்படத் தலைப்புத் தேர்வா அல்லது அதன் பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் கணக்குகள் இருக்கின்றனவா?
குறிப்பாக, திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் ஆட்சியில் இந்தப் பெயர் மீண்டும் விவாதத்திற்கு வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
இது கமல்ஹாசனின் கலைச் சுதந்திரமா? காலம் மாறிவிட்டது என்ற நம்பிக்கையா? அல்லது அரசியல் சூழல் மாறியிருப்பதால் எடுக்கப்பட்ட முடிவா?
22 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த அதே கேள்விகள் மீண்டும் எழுகின்றன. இந்த முறை ‘சண்டியர்’ என்ற பெயர் சர்ச்சையைத் தாண்டி திரையரங்கிற்கு வருமா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!




