திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிவகார்த்திகேயனால் சிம்புவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிரடி முடிவு எடுக்கப் போகும் நெல்சன்

டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக மாறி இருக்கிறார். இவரின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது வெளிவருவதற்கு தயாராக இருக்கிறது.

அதை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தையும் நெல்சன் இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டர் இருக்கிறதாம். அந்த கேரக்டர் நடிகர் சிம்புவுக்கு தான் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் நெல்சன் முதன் முதலில் சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் இயக்குவதற்கு முன்பிருந்தே நெல்சனுக்கு, சிம்புவுடன் நீண்ட கால நட்பும் இருக்கிறது. அதாவது நெல்சன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் அழகி என்ற ரியாலிட்டி ஷோவை முதன்முதலில் டைரக்ட் செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் vs கேர்ள்ஸ், பிக்பாஸ் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் அவர் பணிபுரிந்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பார் என்று அனைவரும் யூகித்து வருகின்றனர்.

ஆனால் இதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நெல்சனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவரும் விஜய் டிவியில் இருந்து வந்த பிரபலம் என்பதால் இவர்கள் இருவருக்கும் பல காலமாக நட்பு இருக்கிறது.

சொல்லப்போனால் சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது.

இந்நிலையில் நெல்சன் தனக்கு நெருக்கமான இந்த இரண்டு பேரில் யாரை ரஜினி படத்தில் நடிக்க வைப்பார் என்பதை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் நெல்சன் தற்போது இருக்கிறார்.

Trending News