சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்க போவதாக அவ்வப்போது தகவல் வெளியானது. ஆனால் அந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருந்ததால் ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கமலிடம் தேசிங்கு பெரியசாமி இந்த கதையை கூறியுள்ளார்.
Also Read : பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல
ஆண்டவருக்கு இந்த கதை பிடித்துப் போனதால் உடனே படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்தாராம். மேலும் கதையில் சில மாற்றங்கள் சொல்லி 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ரஜினியின் கதை என்பதால் சிம்புவும் உடனே ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் இந்த படத்தில் சிம்பு நடிக்க 40 கோடி சம்பளம் கேட்டுள்ளார். பிறகு கமலே சிம்புவுடன் பேசியதால் 10 கோடி குறைத்துக் கொண்டு 30 கோடிக்கு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆகையால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு கமல் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த படம் ஒரு ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாக இருக்கிறது.
இதனால் படம் பிரம்மாண்ட வெற்றியடையும் என இப்போது கமல் மற்றும் சிம்பு நம்புகிறார்களாம். மேலும் படத்தில் மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு மும்மரமாக நடந்து வருகிறதாம். சிம்பு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவருடைய அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்து வருகிறது.
Also Read : பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்