இந்த ஐ பி எல்லை வைத்து மீண்டும் இந்திய அணியின் கதவை தட்டும் 4 பேர்.. செலெக்ஷன் போர்டுக்கு செக் வைக்கும் தமிழன்

ஐபிஎல் 18ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் பின்தங்கியுள்ளது. அனைத்து வீரர்களும் எப்படியாவது இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள். அப்படி மீண்டும் இந்திய அணியின் கதவை தட்டும் 4 வீரர்கள்

முகமது சிராஜ்: இந்திய 20 ஓவர் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சிராஜ் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளார். இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக10 விக்கிகளை 4 போட்டிகளில் சாய்த்துள்ளார். அதிகரிக்கட்டுகள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவதில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கருண் நாயர் :2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் அடித்தார். விரேந்திர சேவாக்கிற்கு அப்புறம் இவர் தான் இந்திய அணியில் 300 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர். இப்பொழுது இந்த ஐபிஎல்லில் நன்றாக விளையாடி வருகிறார். மீண்டும் இந்திய அணியின் கதவை தட்டுகிறார்.

சாய் சுதர்சன்: 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இவர் இந்திய அணிக்காக 3 ஒரு நாள் போட்டிகளும், ஒரு 20 ஓவர் போட்டியும் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் சராசரி 63 வைத்துள்ளார். இவர் இப்பொழுது ஐபிஎல் நன்றாக விளையாடி மீண்டும் இந்திய அணி கதவை தட்டுகிறார்.

ரியான் பராக்: இவர் இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் இடம் பிடித்து விளையாடி வந்தார். ஆனால் துரதிஷ்டமாக இவருக்கு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இப்பொழுது ipl போட்டியின் மூலம் தன்னை நிரூபித்து வருகிறார்.