ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட்டுக்கு என்று வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அதாவது எண்ணிக்கையில் அடங்கிய பந்துகள் கிடையாது. காலப்போக்கில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சி பெற்று 60, 50, 20 ஓவர்கள் என விறுவிறுப்பாக குறைக்கப்பட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட விளையாட்டில் பயமே இல்லாமல் எதிரணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த ஐந்து அபாய பேட்ஸ்மேன்கள்.
ப்ரண்டன் மெக்குல்லம் : நான்கு அடியில் நங்கூரம் போல் நின்று நாலாபுறமும் வெளுத்து வாங்கும் நியூசிலாந்து அணியின் ஓப்பனர் இவர். பல போட்டிகளில் மெக்ராத், பிரெட்லியை கதறவிட்ட இவர் முதல் முதலில் ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்தவர். 20 பந்துகள் விளையாடினாலும் 40 – 45 ரன்கள் அடித்து கதிகலங்க செய்வார்.
வீரேந்தர் சேவாக்: இந்திய அணிக்கு இன்று வரை இவரை போல பயமறியா வீரர் யாரும் கிடைக்கவில்லை. 99 ரண்களில் இருந்தாலும் சர்வ சாதாரணமாக கிரீசை விட்டு வெளியே வந்து சிக்ஸர் அடிக்கும் பயமறியாத வீரர். அதுவும் பாகிஸ்தான் அணி என்றால் இவரது வேகம் இரு மடங்கு இருக்கும். சோயப் அக்தர், வாசிம் அக்ரம் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
சனத் ஜெயசூர்யா: வீரர்கள் வட்டத்துக்குள் நிற்கும், பவர் ப்ளேயில் எப்படி பந்தை வெளியே அடித்து எளிதில் ரண்களை சேர்க்கலாம் என்பதை உலக நாடுகளுக்கு கற்றுக் கொடுத்ததே இவர்தான். ஒருமுறை இலங்கை அணியின் ஸ்கோர், பத்து ஓவர்களுக்கு என்பது அதில் ஜெயசூர்யா அடித்த ரன்கள் 78. அப்படி என்றால் இவருக்கு எதிரே நிற்கும் வீரர் வெறும் இரண்டு ரன்கள் தான் அடித்துள்ளார்,
சாகித் அப்ரிடி: முதல் முதலாக அதிவேக சதம் அடித்தது சாகித் அப்ரிடி. இவர் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது நீண்ட நாட்களாக உலக சாதனையாக இருந்தது. அதன் பின்னர் ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் இருவரும் 35 பந்துகளில் அடித்து அதை தகர்த்தெறிந்தனர். முதலிலிருந்து அபாயகரமாக பவுலர்களை அடித்து ஆடும் திறமையை கொண்டவர் அப்ரிடி
க்ரிஷ் கேல்: இவரது பட்ட பெயர் ஏலியன் தான். ஆள் பார்ப்பதற்கு முரட்டு பயில்வான் போல் தான் இருப்பார். டெஸ்ட் போட்டிகளில் முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த சாதனை இன்று வரை இவரிடம் தான் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் கூட .தனது ஆக்ரோசத்தை விட்டுக் கொடுப்பதில்லை.