இந்த வீரர் எனக்கு வேண்டும், பிசிசிஐயிடம் அடம் பிடிக்கும் அகார்கர்.. சிராஜ், சமியால் வந்த தலைவலி

ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் போகிறது. அங்கே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு இப்பொழுது நடைபெற்று வருகிறது.

ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ள போட்டிக்கு முன்பாக மூன்று நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய ஏ அணியுடன் இங்கிலாந்து மோதுகிறது. இதற்காகவும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டி ஒரு வாரம் கால தாமதம் ஆனதால் பல வீரர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சன், குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் போட்டிகளில் விளையாட இருப்பதால் இந்த அரிய வாய்ப்பை இழந்துள்ளார். எனினும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது.

இப்பொழுது இந்திய அணிக்கு ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. காயத்திலிருந்து விடுபட்டு வந்த ஜஸ்பிரீத் பும்ராவை ஐந்து போட்டிகளிலும் விளையாட வைக்க முடியாது என தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் திட்டவட்டமாககூறிவிட்டார்.

இது ஒரு புறம் இருக்க முகமது சிராஜ் ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவரையும் முழுவதுமாக நம்ப முடியாது, அதை போல் முகமது சமியும் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடையவில்லை. இதனால் பௌலிங் யூனிட்டுக்கு பலம் சேர்ப்பதற்காக அர்ஷ்தீப் சிங் வேண்டுமென்று ஒற்றை காலில் நிற்கிறார் அகார்கர்.