இந்திய அணி வரும் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை ஏற்கனவே அறிவித்து விட்டனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாத இந்திய அணிக்கு புது கேப்டனாக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த அணிக்கு ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களை தவிர இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு அறிமுகமாகியுள்ளனர். குறிப்பாக சாய் சுதர்சன் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். இதுதான் இப்பொழுது பூதாகர பிரச்சினையாக கிளம்பி உள்ளது.
ஐபிஎல்இல் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர் சாய் சுதர்சன். இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 679 ரன்கள் குவித்துள்ளார். ஏற்கனவே அவர் இந்திய அணிக்காக மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி உள்ளார்.
இரண்டு வருட போராட்டத்திற்கு பின் இப்பொழுது மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். ரோஹித் மற்றும் கோலியின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் வருங்கால இந்திய அணியில் தூண் போல் மாறிவிடுவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகிறார்கள.
சாய் சுதர்சனை காட்டிலும் பஞ்சாப் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு அனுபவமிக்க வீரரான அவரை அணியில் எடுக்காததை பற்றி முன்னாள் வீரர் முகமது கைப் தேர்வாளர் அஜித் அகார்கரை விளாசி வருகிறார். இங்கிலாந்து போன்ற அனுபவம் மிக்க அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கை கொடுப்பார் எனவும் கூறி வருகிறார்.