ஜென்டில்மேன் கேம்ஐ நாசமாக்கிய பென் ஸ்ட்ரோக்ஸ்.. நான் குதிரை ஜாக்கி என திமிரை அடக்கிய சர் ரவீந்திர ஜடேஜா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. 99 சதவீதம் இங்கிலாந்து கையில் தான் இந்த போட்டி இருந்தது ஆனால் இந்தியா அதை தடுத்து நிறுத்தி போட்டியை டிரா செய்தது.

இங்கிலாந்தை விட 311 ரன்கள் இந்தியா பின் தங்கியிருந்த நிலையில் முதல் ஓவரில் 0 /2 என இரண்டு விக்கெடுகளை இழந்தது. இங்கிலாந்து சுலபமாக இன்னிங்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் சுபம் கில் மற்றும் கே எல் ராகுல் இருவரும் இந்திய அணியை தூக்கி நிறுத்தினர்.

ராகுல் 90 ரண்களும், கில் 103 ரண்களும் எடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் அவர்களும் வெளியேற இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜாவும் அதை தடுத்து நிறுத்தினார்கள்.

இருவரும் தடுப்பாட்டம் ஆடி சிறுக சிறுக ரண்களை சேமித்தனர். இதனால் இந்தியா 114 ரன்கள் முன்னிலை பெற்றது. இருவரும் 50 ஓவர்களுக்கு மேல் நின்று இங்கிலாந்து வீரர்களை தவிக்க விட்டனர். இருவரும் 100 ரண்களை நெருங்கும் போது 14 ஓவர்கள் மீதம் இருந்தது. போட்டியை முடித்து டிரா செய்து கொள்ளலாம் என இங்கிலாந்து வீரர்கள் முயற்சி செய்தனர்.

ஆனால் ஜடேஜா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இருவரும் சதம் அடித்தனர். கடைசி பத்து ஓவர்கள் மீதும் இருக்கும்போது போட்டியை டிரா என்று அறிவித்தனர். போட்டி முடிந்த பின் ஜடேஜாவிடம் கை கொடுக்காமல் அந்த அணி கேப்டன் பென் ஸ்ட்ரோக்ஸ் திமிரு காட்டினார். ஜடேஜா, சுந்தர் இருவரையும் 100 ரன்கள் அடிக்க விடாமல் இங்கிலாந்து செய்த சூழ்ச்சியை ஜடேஜா தவிடு பொடியாக்கினார்.