இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் வார்த்தை போர்களும், சீண்டல்களும் அளவுக்கு அதிகமாய் இருந்தது. ஆடுகளத்தில் இரு வீரர்களும் பரம விரோதிகள் போல் மோதிக் கொண்டனர். இது இங்கிலாந்து மற்றும் இந்திய ரசிகர்களுக்கிடையே பகை உணர்வை ஏற்படுத்தியது.
ஆனால் தொடர் முடிந்தவுடன் இரு வீரர்களும் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என நிரூபித்தது . குறிப்பாக கடைசி போட்டியில் ஓவல் மைதானத்தில் விளையாடிய முகமது சிராஜ், பென் டக்கெட் இடையேயான மோதல் அளவு கடந்து போனது.
கடந்த போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் கேப்டன் சுபம் கில் மற்றும் ஜாக் கிராலி இடையேயான வாக்குவாதம், ஜோரூ ரூட்டுடன் ஆகாஷ் தீப் மோதல் என இந்த தொடர் முழுவதும் இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டனர்.
ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடர் இருவருக்கும் வெற்றி கிடைக்காமல் சமமாக முடிந்தது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பாராட்டுகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது, இந்தத் தொடர் முழுவதும் சிராஜுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருந்த பென் டக்கெட், அவரிடம் சென்று மனதாரப் பாராட்டி கட்டித்தழுவிக் கொண்டார்.
கேப்டன் பென் ஸ்ரோக்ஸ் இந்திய வீரர்கள் அனைவரையும் கட்டித் தழுவி சகோதரத்துவத்தை காட்டினார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்குள்ளம் இது ஆரோக்கியமான தொடராக அமைந்தது, அன்பு, சகோதரத்துவம், நேர்மை, என அனைத்தையும் இந்த தொடர் உலக கிரிக்கெட்டுக்கு கற்றுக் கொடுத்தது என வெகுவாக பாராட்டினார்.