உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா.? வாய் கூசாமல் ரிஷப் பந்த்தை வம்பிழுத்த இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் வெளியேறினார். ரிட்டையர்டு ஹர்ட் ஆன பின்பு இந்தியா இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது மீண்டும் விளையாட வந்தார்.

கிறிஸ் போக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் பண்ணும் முயற்சியில் கால்களில் பலத்த அடி வாங்கினார். இதனால் நிற்க முடியாத அவர் மைதானத்தை விட்டு அவசர கால ஊர்தி மூலம் வெளியேறினார். அவர் போகும்போது வாய் திறக்காத இங்கிலாந்து இப்பொழுது மீண்டும் விளையாட வந்த போது பழித்து பேசுகிறார்கள்.

ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணியினர் வேண்டுமென்றே நேரத்தை கடத்தினார்கள் அதனால் இந்திய அணியினர் ஆவேசப்பட்டு தேவையில்லாத வார்த்தைகளை விட்டதாக இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தது.

இப்பொழுது அவர்கள் செய்தது நியாயம் என்ற விதத்தில் ரிஷப் பந்த்தின் செய்கையை வைத்து சப்பக்கட்டு கட்டுகிறார்கள். ரிஷப் பந்த் மீண்டும் விளையாட வரும்பொழுது நடக்க முடியாமல் திணறி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என பழி போட்டு வருகிறார்கள்.

இதற்கு முன்னால் வீரர்கள் பலரும் இந்தியா நியாயமற்ற விளையாட்டை விளையாடுகிறது என்று இங்கிலாந்து மீது பழி போட்டதற்கு பதிலாக கண்டபடி பேசி வருகிறார்கள். முன்னாள் வீரர் டேவிட் லாயிடும் இதற்கு எல்லா வீரர்களும் காயமடைவார்கள் ஆனால் ரிஷப் பந்த் நடிக்கிறார் என அவர் கருத்தை முன் வைக்கிறார்.