பிரச்சனைகளை முழுவதுமாக களை எடுத்த கம்பீர்.. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புது திட்டம்

இங்கிலாந்து அணி இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை மட்டம் தட்டி பல வார்த்தைகளை விட்டது. குறிப்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்வான், இந்த போட்டிகள் எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது இது ஒரு பயிற்சி போட்டி போன்றது தான் என கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவுடன் விளையாடினால் எங்களுக்கு போதிய பயிற்சி கிடைக்கும். அதனால் தான் இந்தியாவுடன் விளையாடுகிறோம் மற்றபடி அவர்களை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்வோம் என்றெல்லாம் வார்த்தையால் விளையாடினார்கள்.

அவர்கள் சொல்லியது போல் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி கையில் தான் போட்டியிருந்தது, ஆனால் அதை எளிதாக கோட்டை விட்டது. இந்த காரணங்களை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளர் கம்பீர் களை எடுத்துள்ளார்.

அதாவது இந்திய அணியில் இரண்டு இன்னிங்ஸிலும் கீழ் வரிசையில் உள்ள ஐந்து பேட்மேன்கள் எல்லோரும் சேர்ந்து 30- 40 ரன்கள் கூட சேர்க்கவில்லை. இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். கருண் நாயருக்கு பின் விளையாடும் யாரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை. இதுதான் இரண்டு இன்னிங்ஸிலும் பாதகமாய் பார்க்கப்படுகிறது.

அதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார். சார்துல் தாக்கூருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டியை இறக்க திட்டமிட்டுள்ளார். அது மட்டும் இன்றி முகமது சிராஜிக்கு பேட்டிங் பயிற்சியும் கொடுத்து வருகிறார். பும்ராக்கு முன்னர் இந்த போட்டியில் சிராஜ் களமிறங்க உள்ளார்.