சொகுசு காரு, பெத்த தொகைய லாவிக்கிட்டு போன பால்வாடி.. வாழ்க்கையவே புரட்டி போட்ட சூரியவன்சியின் சதம்

நாமெல்லாம் 14 வயதில் என்ன செய்து கொண்டிருப்போம், மிஞ்சி போனால் ஏழாவதுஅல்லது எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருப்போம். ஆனால் இங்க ஒரு முகச்சவரமே பண்ணாத 14 வயது பையன் ரெக்கார்டு மேல ரெக்கார்ட் வைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் தான் அடுத்த இந்திய கிரிக்கெட்டின் தூண் என்பது போல் இருக்கிறது அவரது விஸ்வரூபம். 2025 ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக சுமார் 1.10 கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட டீனேஜர் தான் வைபவ் சூர்யவன்சி.

14 வருடங்கள் ஒரு மாதம் சரியாக கணிக்கப்பட்ட இவரது வயது. இந்த தொடரில் நான்கைந்து போட்டிகள் தான் விளையாடியிருக்கிறார். விளையாடிய நாலாவது போட்டியிலேயே உலக சாதனை.

அதிவேக சதம். 35 பந்துகளில் நூறு ரன்கள். மொத்த கிரிக்கெட் உலகையே இந்த 14 வயது பையன் திரும்பி பார்க்க செய்துள்ளார்.

அவ்வளவு எளிதாக பெரிய பெரிய பௌலர்களாகிய இஷாந்த் ஷர்மா, ரஷீத்கான் போன்றவர்களை விளாசி தள்ளுகிறார். இப்பவே இப்படி என்றால் இன்னும் பத்து வருடங்களில் உலக கிரிக்கெட்டை அச்சுறுத்தி விடுவார்.

இந்த ஒரு போட்டி இவரது வாழ்க்கையவே மாற்றி உள்ளது. அஸ்ஸாமில் உள்ள தொழிலதிபர் ரஞ்சித் பர்னாகூர், வைபவ் சூரிய வன்சிக்கு அசத்தலான ஒரு சொகுசு பென்ஸ் காரை பரிசளித்துள்ளார்.

இவர் ராயல் மல்டி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டடின் CEO வாக இருக்கிறார். Mercedes-Benz GLE 300d 4Matic என்ற பென்ஸ் கம்பெனியின் உயர்ரக சொகுசு வசதிகளை கொண்ட மாடலை பரிசாக வழங்கியுள்ளது அந்த நிறுவனம்.

அதுமட்டுமின்றி பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், வைபவ் சூரியவன்சிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளார்.