என்னையவா அணியில் இருந்து நீக்குனேங்க.. பேய் பிடித்தது போல் கதிகலங்கச் செய்த ப்ரிதிவ் ஷா

இந்திய அணியின் அடுத்த சேவாக், சச்சின் என்றெல்லாம் பெயரெடுத்தவர் ப்ரிதிவ் ஷா. இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சில போட்டிகளில் அதிரடி காட்டினாலும்  நின்று, நிலைத்து ஆடுவதில் சற்று சிரமப்பட்டார்.

5 ஒவர்களுக்குள் எப்பொழுதுமே ஆட்டம் இழந்து விடுவார். ஆனால் அதற்குள் 4-5 பவுண்டரிகள் விளாசி விடுவார். தொடர்ந்து நின்று விளையாடாத காரணத்தால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சற்று குள்ளமாக இருப்பார்.

ப்ரிதிவ் ஷாவிற்கு உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இவர் இப்பொழுது 7 கிலோ வரை உடம்பைக் குறைத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி சையத் முஷ்டாக் அலி 20ஓவர் தொடரில் பிரித்வி ஷா தனது திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அசத்தி வருகிறார். முதல் போட்டியில் 34 பந்தில் 55 ரன்கள், 2வது போட்டியில் 12 பந்தில் 29 ரன்கள் எடுத்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தனது அபார அதிரடி ஆட்டத்தின் மூலம் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதனைத் தொடர்ந்தும் அவரது பேய்ஆட்டம் நிக்கவில்லை.

இப்படி சாமி வந்தது போல் ஆடிய ப்ரிதிவ் ஷா 46 பந்துகளில் 20 ஓவர் போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் காரணமாக 61 பந்தில் 134 ரன்கள் என்று விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. அதன்பின்19.3 ஓவர்களில் அசாம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது.