சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள்.. என்னல்லாம் மாத்திருக்காங்க பார்க்கலாம்

Cricket : கிரிக்கெட் விளையாட்டு அனைவரும் விரும்பி பார்க்க கூடிய ஒரு விளையாட்டு. ஒவ்வொரு கழகத்திற்கும் ஏற்றவாறு விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு மேருகேற்றபட்டது. குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் கிரிக்கெட் தற்போது புது விதிமுறைகள் கொண்டுவந்துள்ளனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள்..

ஸ்டாப் கிளாக் : டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். இல்லையெனில் இருமுறை எச்சரிக்கை விடப்படும். 3ஆவது முறை தாமதம் செய்தல் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் அமலாகும்.

எச்சில் தடவினால் : பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவதற்க்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரீஸை தொடாமல் ரன் : ஓடி ரன் எடுக்கும்போது வீரர் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால். அந்த ரன் வழங்கப்படாது. பேட்டார்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பௌலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், அடுத்து பந்தை எந்த பட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பௌலிங் அணி கேப்டன் முடிவு செய்யலாம்.

DRS முறையீடு : Wide, out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பௌலிங் கேப்டன் DRS கேட்டு, 3ஆவது நடுவரிடம் ரெபெற்றால்கூறினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடு முதலில் ஏற்றுக்கொள்ளப்படும்.

No Ball கேட்ச் : No Ball பந்தை பேட்டர் அடித்து அது கேட்ச் பிடிக்கப்பட்டால், அது முறையான கேட்ச் எனும்பட்சத்தில் ஒரு ரன் மட்டுமே வழங்கப்படும். முறையாக பிடிக்கப்படவில்லை எனில், பேட்டேர்கள் ஓடி எடுத்த ரன்கள் வழங்கப்படும்.

DRS வாய்ப்பு : விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததற்கு நடுவர் அவுட் கொடுக்க. அதற்கு DRS கோருகிறார் பேட்டர். சோதனையில் பந்து பேட்டில் படாமல் pad-ல் பட்டிருந்தது, LBW சோதனையில் Umpires call- ஆக இருந்தாலும் அது not வுட்டேனா வழங்கப்படும், புதிய விதியின்படி, original decision, Umpires call என எதுவாக இருந்தாலும் அவுட் வழங்கப்படும். இவ்வாறாக புதிய விதிமுறைகளை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் மையம்.