முறியடிக்கப்படுமா இந்தியாவின் சாதனை! மேற்கிந்திய தீவுகள் தவிர யாருக்கும் வாய்ப்பில்லையாம்

கிட்டத்தட்ட150 ஆண்டுகால பழமையானது கிரிக்கெட் போட்டிகள். ஆரம்ப காலத்தில் இங்கிலாந்து நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு தற்போது பல மாறுதல்கள் அடைந்துள்ளது. முதலில் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் ஒரு ஓவரில் 4 பந்துகளை மட்டுமே கொண்டது, அதன்பின் 5 பந்துகள் என மாற்றப்பட்டு கடைசியில் 6 பந்துகளாக நிர்ணயிக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை எந்த அணிகளுமே செய்யாத ஒரு சாதனையை இந்திய அணி மட்டுமே செய்துள்ளது. இந்திய அணி இதுவரை மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. எல்லா அணிகளுமே உலக கோப்பையை வென்றுள்ளது ஆனால் இந்திய அணி வென்றுள்ளதில் ஒரு சிறப்பம்சம் உள்ளது.

Dhoni-Kapil-Cinemapettai.jpg
Dhoni-Kapil-Cinemapettai.jpg

இந்திய அணி 60 ஓவர், 50 ஓவர், 20 ஓவர் என மூன்றுவிதமான ஒருநாள் போட்டிகளில் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இதுவரை இந்த மூன்று வரையறுக்கப்பட்ட ஓவர்களை கொண்ட உலகக்கோப்பையை எந்த அணியும் வென்றதில்லை.

இப்பொழுது 60 ஓவர் போட்டிகள் விளையாடப் படுவதில்லை ஆகையால் இந்திய அணியின் இந்த சாதனையை முறியடிப்பது கடினம். இந்த 60 ஓவர் உலகக்கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றுள்ளது. அந்த அணி ஏற்கனவே 20 ஓவர் உலக கோப்பையையும் கைப்பற்றியுள்ளனர்.

அவர்கள் இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆகையால் இந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று விட்டால் இந்திய அணியின் இந்த சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியினர் தகர்த்து விடுவார்கள்.