இந்தியா மற்றும் இங்கிலாந்து விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் களத்தில் அனல் பறக்கிறது.நேற்றைய போட்டியில் பல சுவாரசியமான விஷயங்கள் நடைபெற்றது
முதலில் ஆடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 247 ரண்களில் அவுட்டாகி 23 ரன்களை முன்னிலையாகப் பெற்றது . தற்போது இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
முன்னதாக இந்த போட்டியில் 22வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா 5வது பந்தின் முடிவில் ஜோ ரூட்டிடம் ஏதோ வார்த்தைகளை விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்த ஜோ ரூட் அவரிடம் “எங்கிட்ட மோதாதே” என்று தன் காலரை தூக்கி விட்டார்.
எப்பொழுதுமே சாந்த சொரூபியாக இருக்கும் ஜோ ரூட் பொறுமையிழந்து பிரசித் கிருஷ்ணாவிடம் கடுமையாக சண்டை போட்டார் உடனே நடுவர்கள் தலையிட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர். அப்போது ராகுல் இந்தியாவிற்கு ஆதரவாக நடுவர் தர்மசேனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . ஆனால் ராகுல் பேசியதற்கு தர்மசேனாவிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது
“களத்தில் நாங்கள் எதுவுமே பேசாமல் வாயை மூடிக்கொண்டு அமைதியாக செல்ல வேண்டுமா?” என்று ராகுல் கேட்டார். அதற்கு போட்டி முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் இப்போது அமைதியாக செல்லுங்கள் என பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.