ரிட்டயர்மென்ட்டை அறிவித்த ரோஹித் சர்மா.. சொல்லி வச்ச மாதிரி டைம்மிங்கில் தோனியுடன் காட்டிய ஒற்றுமை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ரிட்டயர்மென்ட்டை இன்று அறிவித்துள்ளார். கொஞ்ச நாட்களாக சரியான பார்மில் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர். ஒரு சில விஷயங்களில் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்காக இன்று இந்த ரிட்டயர்மென்டை அறிவித்துவிட்டார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக டெஸ்ட் உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது. நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்தியாவிற்கு இப்படி ஒரு நிலைமையா என முன்னால் வீரர்கள் வறுத்தெடுத்தனர்.

இதற்கு காரணம் ரோஹித் சர்மா தான். அந்தத் தொடரில் சரியான பார்மில் இல்லாமல் ஓப்பனிங் இறங்கி சொற்ப ரன்களில் அவுட் ஆனார். இதனால் பிசிசிஐ முன் ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மா அணிக்கு ஏன் என்ற கேள்விகள் வைக்கப்பட்டது.

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா ஏற்கனவே வெளியேறிவிட்டார். வருகிற ஜூன் 20ஆம் தேதி இந்தத் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதில் ரோகித் சர்மா தாமாக வெளியேறினாரா இல்லை பிசிசிஐ கொடுத்த அழுத்தம் காரணமாக வெளியேறினாரா என்று தெரியவில்லை.

இன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். அவர் சரியாக 7 மணி 29 நிமிடத்திற்கு தனது ஓய்வு முடியை அறிவித்திருந்தார். இதை போல் தான் தோனியும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சரியாக 7: 29க்கு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதில் என்ன சென்டிமென்ட் இருக்கிறது என்பது தெரியவில்லை.