டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியவர் சுனில் கவாஸ்கர். லிட்டில் மாஸ்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான இவர் நுட்பங்கள் தெரிந்து கிரிக்கெட் விளையாட்டை கையாளும் ஆட்டக்காரர். டெஸ்ட் போட்டிகளில் இவரை வீழ்த்துவது சவால் நிறைந்த விஷயம்.
இவரை போலவே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நுட்பமான ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர். மாஸ்டர் பிளாஸ்டர் என்று பெயர் வாங்கிய சச்சின் ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்தவர் என்ற மைல்கல் சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். இவர்களைப் போலவே ஒரு வீரரை பார்ப்பதாக நவ்ஜத் சிங் சித்து ஓவர் முட்டு கொடுத்து வருகிறார்.
இப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன்.அடுத்து இந்திய அணிக்காக விளையாடவும் இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இவர் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலாவதாக இருக்கிறார்.
12 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் ஒரு சென்ஜீரியுடன் 617 ரன்கள் எடுத்துள்ளார்.இதன் மூலம் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்திருக்கிறார். குஜராத் அணி பிளே ஆப் போட்டிகளுக்கு முன்னேறியதாலும், போட்டிகளுக்கு ஒரு வார காலம் இடைவெளி ஏற்பட்டதாலும் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் சாய் சுதர்சனால் இடம் பெற முடியவில்லை..
கவாஸ்கர் இடமுள்ள கிரிக்கெட் நுட்பமும், சச்சின் இடமுள்ள பொறுமையும், நேர்த்தியான அணுகுமுறையும், சாய் சுதர்சனிடம் இருப்பதாக நவ்ஜத் சிங் சித்து கூறி வருகிறார். வருங்கால இந்திய அணியில் பல சாதனைகளை சாய் சுதர்சன் நிகழ்த்தி விடுவார் எனவும் கூறி .வருகிறார்.