ஐபிஎல்காக 5 பயிற்சியாளர் வாங்கும் பெத்த காசு.. ஒரு மாசத்திலேயே கஜானாவை நிரப்பிய ராகுல் டிராவிட் 

 ஆஹா இந்த ஐபிஎல் வந்து விட்டாலே இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும்  குஷியாகி விடுவார்கள். 40 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 2  வருட சம்பளத்தை வாங்கி குவித்து விடுவார்கள். வீரர்களை காட்டிலும் இப்பொழுது ஐந்து பயிற்சியாளர்கள் காட்டில் பணமழை கொட்டுகிறது

 மகிலா ஜெயவர்த்தன: ஸ்ரீலங்காவின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திரமான இவர் இப்பொழுது ரோகித் சர்மாவின் மும்பை அணியின் பயிற்சியாளராக  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரின் மொத்த நெட்வொர்த் 85 கோடிகள். இவர் ஐபிஎல்காக வாங்கும் சம்பளம் 4 கோடிகள் .

 ஜஸ்டின் லாங்கர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிக்கு  பயிற்சியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான்  ஜஸ்டின் லாங்கர். இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 86 கோடிகள். இவரும் ஐபிஎல் போட்டிக்காக நான்கு கோடிகள் சம்பளம் பெறுகிறார்.

ரிக்கி பாண்டிங்:  ஆஸ்திரேலியா அணியினரை மூன்று முறை உலக கோப்பையை வெல்ல  செய்தவர் பாண்டிங். இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 600 கோடிகள் அதுமட்டுமின்றி இவர் ஐபிஎல் உரிமையாளர்களிடமிருந்து ஆண்டுக்கு 3.5 கோடிகள் சம்பளமாக பெறுகிறார். இவர் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.

 ராகுல் டிராவிட்: முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் ராகுல் டிராவிட். இவரது மொத்த சொத்து மதிப்பு 300 கோடிகள். ஆண்டுதோறும் ஐபிஎல் உரிமையாளர்களிடம் இருந்து இவருக்கு சம்பளமாக 5 கோடிகள் வருகிறது.

 ஆஷிஷ் நெஹ்ரா: பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற செய்த நெஹ்ரா இப்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 45 கோடிகள் மேலும் இவர் ஐபிஎல்   உரிமையாளர்கள் இடமிருந்து பெரும் தொகை 3 கோடிகள்.