ரோகித், விராத்தை தொடர்ந்து ரிட்டயர்மென்ட்க்கு ரெடியாகும் வீரர்.. பிசிசிஐ வட்டாரத்தில் ஏற்பட்ட புகைச்சல்

அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே ஜூன் 20 ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட பெஸ்ட் தொடரின் விளையாட இருக்கிறது. நீண்ட தொடரான இது ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட். விளையாட உள்ளார். மூத்த வீரர்கள் வரிசையில் கே எல் ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். மற்றபடி இளம் வீரர்களே இந்த தொடரில் நிறைய வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் முக்கியமான நட்சத்திர பவுலர் முகமது சமி தொடர்ந்து இந்திய அணியில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். 2023 ஆம் ஆண்டிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியில் அவ்வப்போது தான் விளையாடி வருகிறார். இதுதான் இப்பொழுது பிசிசிஐ வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

முகமது சமியால் ஒரே நாளில் 15 ஓவர்கள் வீச முடியாத என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனால் அவரை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து நிராகரித்து வருகிறார்கள். 34 வயதில் எல்லா வேகப்பந்து வீச்சாளருக்கும் வரக்கூடிய பிரச்சனை தான், ஆனால் இதிலிருந்து அவர் மீள முடியாமல் தவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரில் முகமது சமி இடம்பெறவில்லை. இப்பொழுது இங்கிலாந்து தொடரிலும் வெளியேறியுள்ளார். இப்படி முக்கியமான வெளிநாட்டு தொடர்களில் பெரிய அணிகளுக்கு எதிராக சமி விளையாடாமல் இருப்பது பிசிசிஐ வட்டாரத்தில் பிரச்சனையை கிளப்பியுள்ளது. அதனால் அவருடைய கேரியரும் முடிவுக்கு வந்ததை நம்மால் உணர முடிகிறது. கூடிய விரைவில் முஹம்மது சமியும் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.