இந்திய கிரிக்கெட் அணி நயன் மோங்கியாவிற்கு பிறகு நிரந்தர விக்கெட் கீப்பர் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. சபா கரீம், எம்எஸ்கே பிரசாத், அஜய் ராத்ரா, சமீர் டி.கே , விஜய் தாகியா என வீரர்கள் அணிக்குள் வருவதும் போவதுமாய் பிசிசிஐக்கு பெரிய தலைவலியாய் இருந்தது.
1999 ம் ஆண்டிற்கு பிறகு கௌரவ கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் சிறிது காலம் இந்த ஐந்து விக்கெட் கீப்பர்களை வைத்து ஓட்டிக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இந்த வீரர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாமல் போனதால் மனக்குழப்பத்தில் இருந்தார்.
2003 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் முழு நேர விக்கெட் கீப்பராக ராகுல் டிராவிட் விளையாடி வந்தார். இது அவருக்கு மேலும் பணிச்சுமையை ஏற்படுத்தியது. டெஸ்ட் போட்டிகளில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்து வந்தார். இது மொத்தமாய் அணிக்கு பின்னடைவாக இருந்தது.
2004ஆம் ஆண்டு சௌரவு கங்குலி கூட்டிட்டு வந்தவர் தான் மகேந்திர சிங் தோனி. முதல் போட்டியில் டக் அவுட் , இரண்டாவது போட்டியில் 7 ரன்கள், மூன்றாவது போட்டியில் 13 ரன்கள் என சொதப்பிக்கொண்டு இருந்தவரை பிசிசிஐ கழட்டி விட முடிவு செய்தது.
அப்பொழுது சௌரவ் கங்குலி தோனியை எனக்கு வெகு நாட்களாக தெரியும் சரியான சந்தர்ப்பம் கொடுத்தால் இந்த பையன் பெரிய ஆளாக வருவார் , நல்ல பவர் ஹிட்டிங் எபிலிட்டி இருக்கிறது என பிசிசிஐ இடம் சிபாரிசு செய்து தொடர்ந்து போட்டிகளில் விளையாட வைத்திருக்கிறார்.
விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் தன்னுடைய இடத்தை தோனிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அதனால் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி 123 பந்துகளில் 144 ரன்கள் அடித்து பாகிஸ்தானை திணறடித்துள்ளார். அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு ஏறு முகம் தான். அவருக்கு இப்படி ஒரு கேரியரை அமைத்துக் கொடுத்தது சௌரவ் கங்குலி.
ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் தோனி இளம் அணியை கட்டமைக்கும் முயற்சியில் கங்குலியை அணியில் இருந்து கழட்டி விட்டார். மூத்த வீரர்களின் செயல்பாடு சரியாக இல்லை என விரேந்திர சேவாக், கௌரவ கங்குலி போன்றவர்களுக்கு செக் வைத்து அணியிலிருந்து தூக்கி விட்டார்.