ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இதற்கு பிசிசிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை தான் காரணம் என்ற ரகசியம் வெளிவந்துள்ளது. சீனியர் வீரர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு நடப்பதை தடுத்து நிறுத்தி உள்ளது பிசிசிஐ.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதிலிருந்து இந்திய அணிக்கு கஷ்ட காலம் பிறந்துள்ளது. போட்டியை வெல்வதில்லை ஆனால் சலுகைகள் மட்டும் உங்களுக்கு வேணுமா என பல முட்டுக்கட்டைகளை பிசிசிஐ போட்டுள்ளது.
சீனியர் வீரர்களை குறிவைத்து இந்த புது ரூல்ஸ்ஐ அமல்படுத்தியுள்ளது. இனிமேல் வீரர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்லக்கூடாது, ஒரு தொடர் நடக்கும் பொழுது குடும்பத்தினரை இரண்டு வாரங்கள் கழித்து தான் சந்திக்க வேண்டும்.
குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களுக்கு ஆகும் செலவுகளை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணிக்க வேண்டும். பயிற்சி முடிந்த பின்னும், பயிற்சி செல்லும் போதும் ஒன்றாக தான் பயணிக்க வேண்டும், ஒருவருக்கு இவ்வளவு லக்கேஜ்தான் இருக்க வேண்டும் என கடுமையான விதிமுறைகளை போட்டுள்ளது.
இதனால் பெரும் அதிருப்தியில் இருந்துள்ளார் விராட் கோலி. பெரும்பாலும் அவர் வெளிநாடு தொடருக்கு குடும்பத்தோடு தான் செல்கிறார். அப்படி செல்வதால் தான் அவரால் போட்டியில் நன்றாக விளையாட முடிகிறது என நம்புகிறார். இப்படி பிசிசிஐ கட்டுப்பாடு விதித்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் ஓய்வு முடிவை தெரிவித்துவிட்டாராம். ஆனால் அதை பிசிசிஐ மறு பரிசீலனை செய்யுமாறு கூறிவிட்டதாம்.