Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஆண்டவரின் பெருந்தன்மை.. மெய்சிலிர்த்துப் போன ரோலக்ஸ் சூர்யா

ஆண்டவரின் பெருந்தன்மை.. மெய்சிலிர்த்துப் போன ரோலக்ஸ் சூர்யா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்தால் படத்தின் கதாநாயகன் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் கமலஹாசன் தன்னுடைய விக்ரம் படத்தில் தனக்கு இணையான முக்கியத்துவம் மற்ற நடிகர்களுக்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதனால் தான் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற நடிகர்களுக்கு கமலுக்கு இணையான கதாபாத்திரத்தை லோகேஷ் கொடுத்திருந்தார். அதேபோல் இப்படத்தின் இறுதியில் 5 நிமிடம் மட்டுமே வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு இருந்தது.

சூர்யாவுக்கு ஐந்து நிமிடம் கொடுத்தாலும் அதையும் பெருமிதமாக எண்ணி படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இவ்வாறு ஒரு சகநடிகனாக இருந்தும் கமலஹாசன் போட்டி, பொறாமை இன்றி மற்ற ஹீரோக்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்க சொன்னது பலராலும் பாராட்டிப்பட்டு வருகிறது.

அதே போல் விக்ரம் படத்தின் மூன்றாவது பாகத்தில் சூர்யாவுக்கு பெரும்பாலான காட்சிகள் கொடுக்கும்படி இயக்குனர் லோகேஷ்யிடம் கமலஹாசன் கூறியுள்ளாராம். அதனால் விக்ரம் 3 படத்தில் சூர்யாவிற்கு தான் அதிகம் மாஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதாம். அதாவது கமலஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற கனவால் இப்படத்தில் சூர்யா சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

அதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமலஹாசன் தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்துள்ளார். சினிமாவில் ஒரு நடிகர் தன்னுடைய படத்திற்கு முக்கியத்துவத்தை குறைத்து மற்றொரு நடிகருக்கு கொடுக்கமாட்டார்கள். ஆனால் கமலின் இந்த செயல் பலராலும் பாராட்டப்படுகிறது. மேலும் சூர்யா இதை நினைத்து மெய் சிலிர்த்துப் போய்யுள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.