அதிக எதிர்பார்ப்புடன் வர இருக்கும் 6 படங்கள்.. விஜய், அஜித்தை ஓரம்கட்ட வரும் கமல்

2022 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்த படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது. அதற்காக ரசிகர்கள் 2023 எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அடுத்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள 6 படங்களை பார்க்கலாம்.

வாரிசு : பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. வாரிசு முதல் பாடல் மற்றும் இரண்டாம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

துணிவு : அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்தப் படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ளது.

புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் இயக்கத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து இந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

ஆதிபுருஷ் : ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ். இப்படம் ராமாயண கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வர காத்திருக்கிறது.

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி அடைந்த படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இந்தியன் 2 படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. விஜய், அஜித்தை ஓரம்கட்ட இந்தியன் 2 படத்தின் மூலம் கமல் வர இருக்கிறார்.