பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரத்தை நெருங்க உள்ளது. கடந்த சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காரணம் மக்களுக்கு நன்கு தெரிந்த மீடியா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் இந்த சீசனில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். இவர் வனிதாவின் முன்னாள் காதலர் என்பதால் பல சர்ச்சைகளில் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அடிக்கடி ஜிபி முத்துவை டார்ச்சர் செய்து வந்தார். இதற்கு ஜிபிமுத்துவின் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
அடுத்ததாக சீரியல் நடிகை ரக்ஷிதாவை ராபர்ட் விடாமல் துரத்தி வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் ரக்ஷிதா தனது கணவர் தினேஷை பிரிந்த வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இவர்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. அதுமட்டுமின்றி சமீபத்தில் தினேஷ் ரக்ஷிதாவுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதனால் பிக் பாஸ் முடிந்த கையோடு ரக்ஷிதா, தினேஷ் இருவரும் ஒன்றாக இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ரக்ஷிதாவிடம் ராபர்ட் எல்லை மீறி செல்கிறார். அதுவும் தனக்கு திருமணம் ஆன விஷயத்தை சூசகமாக சொல்ல புடவையில் நெற்றியில் குங்குமத்துடன் நேற்று பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தார். ஆனாலும் ராபர்ட் தனக்கு ரக்ஷிதா மீது கிரஷ் உள்ளதாக போட்டியாளர்களிடம் கூறினார்.
இதெல்லாம் ரக்ஷிதாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளார். இதற்கெல்லாம் இன்று சரியான பதிலடியாக ராபர்ட் மாஸ்டரை வச்சு செய்ய உள்ளார் ஆண்டவர். இன்று சனிக்கிழமை என்பதால் கமலஹாசன் கிடுக்கு பிடியான கேள்விகளால் ராபர்ட்டை கதிகலங்க வைக்க உள்ளார்.