அட்ராசக்க! புது குணசேகரன் வந்தது ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.. பிக் பாஸ் காட்டிய பயத்தால் சன் டிவி எடுத்த முடிவு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் இத்தனை நாளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் மக்கள் மனதில் ஒய்யாரத்தில் இடம் பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து இறப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

அந்த வகையில் இந்த நாடகத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம் குணசேகரனின் நடிப்புதான். அப்படிப்பட்ட இவர் தற்போது இல்லாததால் இந்த நாடகத்தை பார்க்க விருப்பம் இல்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வந்தார்கள். இதனால் இந்த நாடகத்திற்கு கிடைத்த டிஆர்பி ரேட்டிங் கொஞ்சம் கீழே இறங்கியது.

இதை சரிகட்டும் விதமாகத்தான் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளை சன் டிவி நிறுவனம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் நடிகர் வேலராமமூர்த்தி நடிக்க வைப்பதற்கு திட்டம் தீட்டு இருக்கிறார்கள். அவரும் கூடிய விரைவில் மாஸ் என்டரி கொடுத்து வர இருக்கிறார். இதன் பிறகு ஒரு வழியாக எதிர்நீச்சல் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொண்டோம் என்று இருந்தார்கள்.

இந்நிலையில் மறுபடியும் இந்த நாடகத்தின் டிஆர்பி ரேட்டிங் அடிபடும் விதமாக விஜய் டிவி அவர்களுடைய துருப்புச் சீட்டான பிக் பாஸை இறக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் முக்கால்வாசி மக்கள் பிக் பாஸை தான் விரும்பி பார்த்து வருவார்கள். இதனால் எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதனால் டிஆர்பி ரேட்டிங் கம்மியாகி விடும் என்பதால் சன் டிவி அதிரடியான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதாவது பிக் பாஸ் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதால் அதற்கு முன்னதாகவே எதிர்நீச்சல் சீரியலை ஒளிபரப்பு செய்துவிடலாம் என்ற யோசனையில் ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள்.

அதாவது இனி 9 மணிக்க எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வரப்போகிறது. அந்த வகையில் புது குணசேகரன், புது நேரம் என்று புத்தம் புது திருப்புமுனையுடன் எதிர்நீச்சல் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு இடையில் இந்த நாடகத்தை 9:00 மணிக்கு போடுங்கள் என்று ரசிகர்கள் எவ்வளவோ முறை சொல்லியும் கேட்காத சன் டிவி தற்போது பிக் பாஸ் காட்டிய பயத்தின் காரணமாக அவர்களே நேரத்தை மாற்றி விட்டார்கள்.