வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பகையுடன் சுற்றித் திரியும் 10 சக நடிகர்கள்.. ரஜினியை மேடையிலேயே திட்டிய சத்யராஜ்

பொதுவாகவே முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அப்படியிருக்கும் ரசிகர்களுக்குள் எந்த நடிகர் பெரியவர் என்ற போட்டி கடுமையாக இருக்கும். அதிலும் சமூக வலைத்தளங்கள் பெருகி விட்ட இந்த காலகட்டத்தில் அது அதிகப்படியாகவே இருக்கிறது.

இந்தப் பிரச்சனை ரசிகர்களுக்குள் மட்டுமல்ல நடிகர்களுக்கும் இருந்து வருகிறது. அப்படி முன்னணியில் இருக்கும் சில நடிகர்களுக்குள் ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அவை பல நாட்கள் கடந்தும் ஒரு கடும் பனிப்போராக தொடர்ந்து வருகிறது. இப்படி நமக்கு தெரியாத சில நிகழ்வுகளைப் பற்றி இங்கு காண்போம்.

விஷால் – சரத்குமார் சண்டைக்கோழி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த விஷால் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். புகழ் ஏற ஏற இவருக்கு சற்றே தலைக்கனமும் கூடியது. அதனால் மூத்த நடிகர்கள் பலருடனும் இவர் தகராறு செய்திருக்கிறார்.

அந்த வரிசையில் பெரும் பரபரப்பை கிளப்பிய சம்பவம் நடிகர் சங்க தேர்தல். இந்த தேர்தலுக்கு முன் நடிகர் சரத்குமார் நடிகர் சங்க தலைவராக பொறுப்பில் இருந்தார். ஆனால் விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட சிலரைக் சேர்த்து கொண்டு சரத்குமாரை எதிர்த்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டார்.

மேலும் சரத்குமாருக்கு எதிராக பல கருத்துக்களையும் அவர் கூறி வந்தார். அதுமட்டுமல்லாமல் இளம் நடிகர்கள், நடிகைகள் என்று அனைவரையும் தன் பக்கம் வைத்துக் கொண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு நாசர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் விஷால் தான் அவரை பின்னிருந்து இயக்குவதாக ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

ரஜினி – சத்யராஜ் சூப்பர் ஸ்டாரை பொருத்தவரை அவர் எந்த பிரச்சனைகளிலும் சிக்க மாட்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை நிதானமாக தீர்த்து விடுவார். ஆனால் இவருக்கும் நடிகர் சத்யராஜ்க்கும் இடையில் பல நாட்களாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது.

இந்த விஷயம் வெளியில் எப்போது தெரியவந்தது என்றால் காவேரி பிரச்சனை ஆரம்பித்தபோது நடிகர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சத்யராஜ் தமிழர் கன்னடர் பற்றி மிகவும் ஆவேசமாக பேசினார். அவர் மறைமுகமாக ரஜினியைப் பற்றி தான் பேசியதாக அப்போது தகவல்கள் பரவியது.

ஆனால் ரஜினி அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு ரஜினி, சத்யராஜ் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கூட சத்யராஜ் முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார். அவர்களுக்குள் இருக்கும் அந்தப் பனிப்போர் இப்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் – சந்தானம் விஜய் டிவியில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றி பெற்ற நடிகர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் இருவரும் முக்கியமானவர்கள். ஒரு காமெடியனாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் இன்று ஒரு ஹீரோவாகவும் இருக்கிறார்.

அதேபோன்று சிவகார்த்திகேயனும் பெரிய திரைக்கு வந்தார். இவரும் காமெடியனாக தான் வருவார் என்று எதிர்பார்த்த வேளையில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இவர் வளர்ந்து நிற்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் எப்போதோ ஆரம்பித்துவிட்டது.

உதாரணமாக அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு சந்தானம் மறுப்பு தெரிவித்ததால் சிவகார்த்திகேயன் அந்த படத்திலிருந்து நீக்கக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. ஒருவகையில் இவரைப் பார்த்து தான் சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்ததாக சிலர் கூறுகின்றனர்.

சிம்பு – தனுஷ் சினிமாவில் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களின் பட்டியலில் இவர்கள் கட்டாயம் உண்டு. ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரின் படங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிய படி காட்சிகள் இருக்கும். இப்படி வெளிப்படையாகவே இவர்களின் உரசல்கள் தெரிந்தாலும் தற்போது இவர்கள் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர்.

விக்ரம் – சூர்யா இவர்கள் இருவரும் இணைந்து பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றனர். அந்தப் படத்தில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்திருந்தாலும் விக்ரமுக்கு தான் தேசிய விருது கிடைத்தது.

இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சிறிய ஈகோ எழுந்தது. இதன் காரணமாகவே மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் மறுத்தார். அதாவது மணிரத்னம் முதலில் மாதவன் கேரக்டரில் நடிக்க விக்ரமை தான் அணுகினார்.

ஆனால் அப்படத்தில் சூர்யா இருப்பது தெரிந்ததும் விக்ரம் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய திருமணத்திற்கு அனைத்து நடிகர்களையும் அழைத்த சூர்யா விக்ரமை மட்டும் அழைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்த செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியது.

Trending News