Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நயன்தாராவுக்கு வாடகை தாய் ஐடியா கொடுத்த சூப்பர் ஸ்டார்.. வாய்ப்பும் கொடுத்து ஆப்பும் வச்சுட்டாரு

நயன்தாராவுக்கு வாடகை தாய் ஐடியா கொடுத்த சூப்பர் ஸ்டார்.. வாய்ப்பும் கொடுத்து ஆப்பும் வச்சுட்டாரு

இப்படி ஒரு பிரச்சனையை சந்திப்போம் என்று நயன்தாரா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். தற்போது மீடியாக்களுக்கு எல்லாம் தீனி போட்டுக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இதுதான். அந்த அளவுக்கு வாடகை தாய் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து அவரை சுற்றிக் […]

இப்படி ஒரு பிரச்சனையை சந்திப்போம் என்று நயன்தாரா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். தற்போது மீடியாக்களுக்கு எல்லாம் தீனி போட்டுக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இதுதான். அந்த அளவுக்கு வாடகை தாய் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து அவரை சுற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் நயன்தாரா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி விட்டதாக வெளியிட்ட அறிவிப்பு தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய தகுதி இல்லாததால் தான் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றார் என்ற ஏகப்பட்ட கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு விஷயத்தை ஏற்பாடு செய்து விட்டு தான் நயன்தாரா திருமணமே செய்து இருக்கிறார்.

அவர் எதற்காக இப்படி ஒரு முடிவில் இறங்கினார் என்பது தான் ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு யோசனையை கூறியது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தானாம். தற்போது இவர்கள் இருவரும் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

நயன்தாராவின் திருமணத்தில் கூட ஷாருக்கான் கலந்து கொண்டார். அவர்தான் நயன்தாராவுக்கு இப்படி ஒரு விஷயத்தைப் பற்றி கூறியிருக்கிறார். பாலிவுட்டில் இதுபோன்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் சர்வ சாதாரணம்.

அதனால்தான் ஷாருக்கான் நயன்தாராவிடம் இதைப்பற்றி கூறி அதற்கான வழிமுறைகளையும் விளக்கி இருக்கிறார். மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சில பெயர்களையும் அவர் கூறி இருக்கிறார்.

அதன் பிறகு தான் நயன்தாரா துணிந்து இந்த செயலில் இறங்கி இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாராம். மக்கள் இதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்த வேளையில் இந்த செய்தி, வழக்கு, தண்டனை என்று திசை திரும்பி இருப்பது நயன்தாரா, விக்கி தம்பதிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமலா நயன்தாரா இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.