வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்ரம் படத்தை பார்த்த ரஜினி.. லோகேஷை கூப்பிட்டு சொன்ன சீக்ரெட்

வெற்றி இயக்குனர் லோக்கேஷின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற இன்டஸ்ட்ரியல் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இதுவரை தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை. விக்ரம் படத்தை பார்த்த பல பிரபலங்கள் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வருகின்றர். கமலின் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்த படமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. இதில் தளபதி விஜய் விக்ரம் படத்தை பார்த்த பிரமித்து போனதாக லோகேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் படத்தை இரண்டு தடவை பார்த்ததாகக் கூறி பாராட்டியதாகவும், நாம் சேர்ந்து கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம் என கூறியுள்ளாராம். ரஜினி மற்றும் அஜித்துடன் படம் பண்ண வேண்டும் என்பது லோகேஷின் மிகப் பெரிய ஆசை.

தற்போது ரஜினியே ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டுள்ளார். இதனால் கண்டிப்பாக தலைவருக்கு ஒரு இன்டஸ்ட்ரியல் ஹிட் படத்தை லோகேஷ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனால் விக்ரம் படத்தை போல் ஒரு மிகப்பெரிய ஹிட்டைகொடுக்க வேண்டும் என நெல்சனிடம் ரஜினி கூறியுள்ளார். இதற்காக ஜெயிலர் படத்தின் கதையை செதுக்கி வருகிறார் நெல்சன். ஆனால் லோகேஷ், ரஜினி கூட்டணி எப்போது நடக்கும் என்ற கேள்வியை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் லோகேஷ் தற்போது தளபதி 67 மற்றும் கைதி 2 படத்தில் மட்டும் கமிட்டாகி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தளபதி 67 படம் விரைவில் தொடங்கயுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க லோக்கேஷின் படமாக எடுக்கப்பட உள்ளது. இதனால் இந்த படங்களை முடித்த பிறகுதான் ரஜினியின் படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்புள்ளது.

Trending News