Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அட்லிகாக விஜய் இறங்கி செய்த காரியம்.. இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும்

அட்லிகாக விஜய் இறங்கி செய்த காரியம்.. இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும்

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, அதன்பிறகு தளபதியின் இயக்குனர் என்ற பெயரை வாங்கும் அளவுக்கு, தொடர்ந்து அவரை வைத்தே தெறி, பிகில், மெர்சல் என மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் […]

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, அதன்பிறகு தளபதியின் இயக்குனர் என்ற பெயரை வாங்கும் அளவுக்கு, தொடர்ந்து அவரை வைத்தே தெறி, பிகில், மெர்சல் என மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் அதன்பிறகு அட்லி-விஜய் இடையே நட்பு உருவானது

தற்போது அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஹிட் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தான் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

ஷாருக்கானின் மனைவி தயாரிப்பில் உருவாகும் ஜவான் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது. அதற்கு காரணம் அட்லி-விஜய் நட்புக்காக தான் நடிகர் விஜய்யும் கௌரவ வேடத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தில் அதுவும் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்கப் போகிறார். அதற்காக ஜவான் படக்குழுவினர் 25 நாட்கள் படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர். சம்பளம் வாங்காத விஜய்க்காக படப்பிடிப்பை சென்னையில் நடத்த ஷாருக்கான் மற்றும் அட்லி திட்டமிட்டுள்ளனர். இதற்காக விஜய் ஒரு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் .

தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படப்பிடிப்புக்கு இடையே ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கான படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார்

சமீபத்தில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மிரட்டிய நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஷாருக்கான் இரண்டு வேடத்தில் மகனாக ஒரு கதாபாத்திரத்திலும், கேங் ஸ்டராக மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் ஆக்ஷன் திரைப்படமான, இந்தப்படத்தில் மூலம் பாலிவுட்டில் தளபதி விஜய் என்ட்ரி கொடுக்க போகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.