Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விக்ரம் படத்தின் பலம், பலவீனம்.. அதே யுத்தியைக் கையாண்ட லோகேஷ்

விக்ரம் படத்தின் பலம், பலவீனம்.. அதே யுத்தியைக் கையாண்ட லோகேஷ்

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கியிருக்கும் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் விக்ரம் படம் இன்று வெளியாகி […]

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கியிருக்கும் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் விக்ரம் படம் இன்று வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம் படத்தில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை தற்போது பார்க்கலாம். லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர், நடிகைகளை கனகச்சிதமாக தேர்வு செய்துள்ளார். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என அனைவரிடத்திலும் திறமையான நடிப்பை வாங்கியுள்ளார் லோகேஷ்.

இப்படத்திற்கு அனிருத் இசை கூடுதல் வலு சேர்த்துள்ளது. மேலும் கிரிஷ் கங்காதரன் இன் ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக் என ரசிகர்களை பிரமிக்கும் படியாக இருந்தது. மேலும் படத்தின் மையக்கருத்து தான் ஆணி வேராக இருந்தது. படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

இவ்வாறு படத்திற்கு ஏகப்பட்ட பிளஸ் இருந்தாலும் ஒரு சில மைனஸ்களும் உள்ளது. அதாவது கைதி படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் சிலவற்றை விக்ரம் படத்திலும் லோகேஷ் வைத்துள்ளார். அதனால் கைதி படத்தை பார்க்காதவர்கள் விக்ரம் படத்தை பார்த்தால் சில இடங்களில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும்.

மேலும் பெரும்பாலான இடங்களில் கைதி படத்தின் சாயல் விக்ரம் படத்தில் இருந்தது. அதாவது கைதி படத்தில் கதாநாயன் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை எப்படி கையாளுகிறானோ அதே பாணியை விக்ரம் படத்திலும் லோகேஷ் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் விக்ரம் படத்தில் தேவையில்லாத ஒரு சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பெரும்பாலும் அந்த காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் படத்திற்கு அந்த அளவுக்கு இந்த காட்சிகள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக விக்ரம் படம் அமைந்துள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.