Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரிலீஸுக்கு முன்னரே 100 கோடிக்கு மேல் பிசினஸ்.. பாகுபலியை ஓரம்கட்டிய பொன்னியின் செல்வன்

ரிலீஸுக்கு முன்னரே 100 கோடிக்கு மேல் பிசினஸ்.. பாகுபலியை ஓரம்கட்டிய பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 500 கோடியில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக தயாராகிறது. எனவே வரலாற்று திரைப்படமான இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆவதால் ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் […]

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 500 கோடியில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக தயாராகிறது. எனவே வரலாற்று திரைப்படமான இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆவதால் ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமான் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை எடுப்பதற்கு பல வருடங்களாக யோசித்துக்கொண்டிருந்த மணிரத்னத்திற்கு ராஜமவுலியின் பாகுபலி படம் தான் வழிகாட்டுதலாக இருந்திருக்கிறது. தற்போது பாகுபலி படத்தையே மிஞ்சிய பொன்னியின் செல்வன் 2 சேட்டிலைட் உரிமையை பெற்ற திரையுலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.

பாகுபலி படத்தின் முதல் பாகத்தை 41 கோடிக்கும். இரண்டாவது பாகத்தை 51 கோடிக்கும் தான் வாங்கினார்களாம். ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என இரண்டையும் சேர்த்து டிஜிட்டல் ரைட்ஸ்சை அமேசன் நிறுவனம் 125 கோடியை வாரிக் கொடுத்து வாங்கியுள்ளது.

மேலும் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் சேட்டிலைட் உரிமையை சன் டிவி 101 கோடி கொடுத்து தன்வசப்படுத்தி இருக்கிறது. ரிலீசுக்கு முன்பே பொன்னியின் செல்வன் 100 கோடிக்கு மேல் பிசினஸ் செய்து வசூல் வேட்டையை இப்பவே ஆரம்பித்துள்ளது.

பாகுபலி படத்தைப் பார்த்த பிறகு தான் பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு ஒரு ஐடியா வந்ததாக மணிரத்தினம் கூறிய நிலையில், படத்தை உருவாக்குவதிலும் வியாபாரத்திலும் ராஜமவுலியையே தூக்கி சாப்பிட்டு விட்டார் மணிரத்தினம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.