விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய அளவு வெற்றியை பெற்றாலும் அந்த படத்தில் விஜய்யை விட அதிகளவு பெயர் கிடைத்தது என்னவோ விஜய் சேதுபதிக்கு தான். பவானி கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி விட்டது.
எப்போதுமே ஹீரோவாக பார்க்கும் ஒரு நடிகரை திடீரென கொடூர வில்லத்தனத்தில் பார்த்தது ரசிகர்களுக்கு பிடித்து விட்டது போல. விஜய்யை விட விஜய் சேதுபதியை பயங்கர பிரபலம் ஆக்கி விட்டனர்.
இவ்வளவு ஏன் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு, விஜய்யே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அருமையாக இருப்பதாக கூறினார் என விஜய் சேதுபதியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும் விஜய்க்கு மாஸ்டர் படத்தில் கொஞ்சம் சங்கடம் தானாம்.
வித்தியாசமாக நடித்தும் JD கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லையே என்ற ஒரு ஆதங்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறதாம். இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படம் உருவாக உள்ளது.
தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் சிவகார்த்திகேயனின் டாக்டர். தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் சேர்ந்து விஜய்க்கு பிரத்யேகமாக டாக்டர் படத்தை போட்டு காட்ட உள்ளார்களாம். அதற்கு காரணமும் இருக்கிறதாம்.
மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த அளவு தனக்கு பெயர் கிடைக்கவில்லை என்பதால் எதற்கும் டாக்டர் படத்தை முன்னாடியே பார்த்தால் தளபதி 65 படத்திற்கு முன் ஏதாவது மாற்றம் இருந்தால் சரிசெய்ய உதவியாக இருக்கும் என முடிவு செய்து விஜய் நெல்சனிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் பரவுகின்றன. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.
ஆனால் முதன் முதலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தை சிவகார்த்திகேயன் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரத்யேகமாக போட்டு காட்டினார் என்ற தகவலும் உள்ளது.