ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்.. தலையில் துண்டு போட்ட படக்குழு!

மணிரத்னம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் கேரியரில் இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்ததில்லை.

இருந்தாலும் லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து துணிச்சலாக பொண்ணியன் செல்வன் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் மணிரத்னமும் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் சார்பிலும் இணை தயாரிப்பாளராக உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற சில முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

மேலும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் திட்டமிட்ட தேதியில் ஷூட்டிங் நடத்தாததால் தற்போது அமிதாப்பச்சன் இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டாராம்.

பொன்னியின் செல்வன் படத்தில் அமிதாப்பச்சன் கதாபாத்திரம்தான் ஒரு முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என கூறி வந்த நிலையில் திடீரென அமிதாப்பச்சன் இப்படி செய்தது படக்குழுவினருக்கு பேரதிர்ச்சி கொடுத்து விட்டாராம்.

ponniyinselvan-cinemapettai-0
ponniyinselvan-cinemapettai

பாகுபலி கட்டப்பா போல முக்கியமான வேடமாம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்தால் எதற்காக அமிதாப் பச்சன் விலகப் போகிறார் என கேள்வி கேட்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Trending News