சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தனது கல்லூரி நண்பர்களுடன் இருக்கும் ஆண்ட்ரியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆண்ட்ரியா பாடிய கூகுள் கூகுள் பாடல் மிகவும் பிரபலம்.

மேலும், மற்ற நடிகைகளை போலவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

andrea jeremiah
andrea jeremiah

அந்த வரிசையில் தற்போது கல்லூரியில் படிக்கும்போது தனது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தபோது பெரிய பெண்ணாக மாற விரும்பினேன். இப்போது பெரிய பெண்ணாக இருக்கிறேன். ஆனால் மீண்டும் கவலையற்ற கல்லூரி பெண்ணாக திரும்பி செல்ல விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News