தனிக்காட்டு ராஜாவாக வெளிவந்த டாக்டர்.. வசூலில் வெற்றியா தோல்வியா.?

நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி கடந்த 9ஆம் தேதி வெளியான படம் தான் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின்னர் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் என்பதால் டாக்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கெண்டிருந்தனர்.

இருப்பினும் கொரோனா மற்றும் பணப்பிரச்சனை காரணமாக டாக்டர் படத்தின் வெளியீடு தள்ளி கொண்டே சென்றது. பின்னர் ஒருவழியாக பிரச்சனையை முடித்து படத்தை திரையரங்கில் வெளியிட்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி படமும் ரசிக்கும் விதமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால் டாக்டர் படம் முதல் மட்டும் ஆச்சரியமளிக்கும் விதமாக சுமார் 8 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இந்த அளவிற்கு வசூல் மற்றும் வரவேற்பு கிடைக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் டாக்டர் படம் இரண்டாம் நாள் முடிவில் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்கு இவ்வளவு வசூல் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். டாக்டர் படம் திரையரங்கில் மட்டுமல்லாமல் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை மூலமும் 12 கோடி ரூபாய் வரை லாபம் பார்த்து விட்டது.

doctor-cinemapettai
doctor-cinemapettai

டாக்டர் படம் மூலம் நல்ல வசூல் கிடைத்து இருந்தாலும், சிவகார்த்திகேயன் கடனில் தான் தவித்து வருகிறார். டாக்டர் படத்தை வெளியிடுவதற்காக தனது முழு சம்பளத்தையும் விட்டு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் பட்ட கஷ்டம் வீண்போகவில்லை. படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

டாக்டர் படத்துடன் வேறு எந்த படமும் வெளிவரவில்லை. என்னதான் ரிலீஸ் அன்று பிரச்சினைகளை சந்தித்தாலும் வசூலில் எதிர்பார்த்ததைவிட வெற்றி பெற்றுள்ளது சிவகார்த்திகேயனின் டாக்டர். வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த நெல்சன் மட்டும் சிவகார்த்திகேயன் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.