புதன்கிழமை, நவம்பர் 20, 2024

நடுராத்திரியில் போன் போட்ட சிவகார்த்திகேயன்.. புல்லரித்துப் போன வெங்கட்பிரபு

கடந்த 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் மாநாடு. ஆனால் இந்த படம் அவ்வளவு எளிதாக இந்த வெற்றியை ருசிக்கவில்லை. படம் தொடங்கிய நாள் முதல் வெளியாகும் கடைசி நிமிடம் வரை பிரச்சனைகளை சந்தித்து தான் படம் வெளியாகியுள்ளது.

அதுவும் சாதாரண பிரச்சனை அல்ல. மாநாடு படம் எப்போதோ வெளியாக வேண்டியது. முன்னதாக தீபாவளி அன்று அண்ணாத்த படத்துடன் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அப்போது படம் வெளியாக வில்லை. அதன் பின்னர் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நடந்த பிரச்சனை காரணமாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் வெளியாகாது என டிவீட் செய்தார்.

இதனை கண்டு திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதன் பின்னர் பைனான்சியர் மற்றும் தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே படம் திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பிரச்சனை குறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “மாநாடு படம் வெளியாகாது என்ற தகவல் வந்தவுடன் திரையுலகினர் பலரும் உதவி செய்ய முன் வந்தனர்.

மேலும் பிரச்சனை தெரிந்தவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் நள்ளிரவு முன்று மணி அளவில் போன் பண்ணி எதுவும் உதவி வேண்டுமா? என விசாரித்தார். அந்த நேரத்தில் அவர் போன் செய்து கேட்டது மிகுந்த ஆறுதலாக இருந்தது” என நெகிழ்ச்சியுடன் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

திரையுலகில் இருக்கும் நடிகர்கள் திரையில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வந்தாலும், திரைக்கு வெளியில் அனைவரும் ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் உதவி செய்து நண்பர்களாகவும் இருப்பதை பார்க்க மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News