பிரச்சினையால் வெளிவர முடியாமல் தவித்த படங்கள்.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய நடிகர்கள்

சினிமாவில் படங்களுக்கு எதிர்ப்பும், பிரச்சனையும் உண்டாவது ஒன்றும் புதிதல்ல. முன்பிருந்தே படங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து கொண்டு தான் உள்ளன. என்ன அப்போது குறைவாக இருந்தது ஆனால் சமீபகாலமாக அதிகளவில் உள்ளது அவ்வளவு தான் வித்தியாசம்.

அந்த வகையில் வெளியாகும் நேரத்தில் பிரச்சனைகளை சந்தித்த படங்களையும், தக்க சமயத்தில் உதவி ஹீரோக்களையும் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். அதன்படி கடந்த 2002ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தான் பாபா.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படம் வெளியாகும் நேரத்தில் பைனான்சியல் மற்றும் படத்தில் இடம்பெற்ற சிகரெட் காட்சி ஒன்றும் பிரச்சனையாக இருந்துள்ளது. உடனே நடிகர் ரஜினிகாந்த் பிரச்சனையில் தலையிட்டு சுமூகமாக முடித்ததோடு படத்தையும் வெளியிட உதவி செய்தார்.

அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி ஆகிய படங்களும் வெளியாகும் சமயத்தில் பணப்பிரச்சனையை சந்தித்தது.

உடனே விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்கே சுரேஷ் ஆகியோர் பணம் கொடுத்து உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடிப்பில் உருவான காவலன் படம் வெளியாகும் சமயத்தில் பணம் மற்றும் தியேட்டர் பிரச்சனை எழுந்ததாம்.

அப்போது தளபதி விஜய் அந்த பிரச்சனையை சரி செய்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட பிரச்சனைகளை நடிகர்கள் தீர்த்து வைத்துள்ள சம்பவம் நிறைய நடந்துள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சிம்புவிற்கும் படம் வெளிவருவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு தற்போது மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.