வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பான் இந்தியா இயக்குனராக உருவெடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. கைவசம் இத்தனை படங்களா.!

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறி இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது.

இதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உட்பட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கிடையில் அவர் தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் மகேஷ்பாபு, ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதால் அந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் நிறைய திட்டமிட்டுள்ளார்.

இதனால் லோகேஷ், மகேஷ்பாபு அந்த படத்தை முடித்துவிட்டு திரும்பி வருவதற்குள் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் இணையும் இந்த படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த லலித் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் விஜய் அனைவரின் கைவசம் இருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் இணையலாம் என்று கூறியுள்ளார். தற்போது விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார்.

இதனால் லோகேஷ் கனகராஜ் தற்போது கோலிவுட்டின் பிசியான இயக்குனராக வலம் வருகிறார். இப்படி வரிசையாக முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க இருப்பதால் லோகேஷ் தற்போது இயக்கி வரும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படி பழமொழி ஹீரோக்களை வைத்து படத்தை இயக்க இருப்பதால் விரைவில் பான் இந்தியா இயக்குனராக உருவெடுக்க உள்ளார் லோகேஷ்.

Trending News