வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

குரூப் டான்ஸ் ஆடுற பொண்ணு கூட நல்லா இருப்பாங்க.. அதிதியை பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க!

பொதுவாக சினிமா நடிகைகள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அவ்வபோது கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு, சினிமாவில் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் இளைய மகள் அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவிற்கு அதிதி ஷங்கர் புதுமுக ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இவர் கார்த்தி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விருமம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து சிம்புவின் கொரோனா குமார் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இன்னிலையில் அதிதி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் வித் சீவ்லஸ் டீசர்ட் கூலிங் கிளாஸ் உடன் மாஸ் காட்டும் விதத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிதியை கண்ணா பின்னான்னு கலாய்த்துள்ளனர். ஏற்கனவே மாஸ்டர் மாளவிகா பதிவிடும் புகைப்படங்களை ட்ரோல் செய்து கொண்டிருந்த நெட்டிசன்கள், தற்போது அதிதி பக்கம் திரும்பிவிட்டனர்.

இதுவரை ஹோம்லி லுக்கில் செம க்யூட்டாக போட்டோ ஷூட் நடத்திய அதிதி, திடீரென்று மாடர்ன் உடையில் முரட்டுத்தனமாக வீடியோ பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆகி உள்ளார். அத்துடன் இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘குரூப் டான்ஸ் பின்னால் ஆடுகிற பொண்ணு கூட இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கும்’ என்றும், ‘ஹீரோயின் மெட்டீரியல் இல்ல. இந்த மாதிரி சர்க்கஸ் காட்டுகிற வீடியோவை பதிவிடாதீர்கள்’ என்றும் அதிதி பதிவிட்ட வீடியோவை கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் ‘பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படைப்பு’ என்றும் ‘ஐயோ கொல்லுறியே குயின்!’ என்றும் அதிதியை வர்ணித்து கமெண்ட் அடிக்கின்றனர். இப்படி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை அதிதி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

Trending News