பீஸ்ட் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம் எனும் அளவிற்கு விமர்சனங்களை பெற்று வருகிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தத் திரைப்படத்தை பார்த்து விஜய் ரசிகர்களே இப்படி சொல்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ரசிகர்களே படத்தை பற்றி இப்படி சொல்வதால் படம் சுமாராகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பு நிறுவனம் படத்தை பற்றிய ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
நிறைய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தாலும் விஜய் மட்டுமே படத்தை தாங்கி செல்வது போன்ற ஒரு எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. அவரைத் தொடர்ந்து விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் அசத்தி இருக்கின்றனர்.
இது தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை என்று விஜய் ரசிகர்கள் கூறி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக இயக்குனருக்கு படத்தை இயக்குவதற்கு போதிய அளவில் நேரம் கொடுக்காதது தான் என்று ஒரு பேச்சு நிலவி வருகிறது.
இதுதான் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்சன் இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை நிறைய விஷயங்களை மேலோட்டமாகவே கொண்டு போயிருக்கிறார். இதுவே அவருக்கான போதிய நேரம் இல்லை என்பதை தெளிவாக விளக்குகிறது.
மேலும் சன் பிக்சர்ஸ் இயக்குனருக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுத்தால் தான் அவரால் படத்தை சரிவர எடுக்க முடியாமல் விரைவாக ஏனோ தானோ என்று முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு மட்டும் போதிய நேரம் கிடைத்து இருந்தால் நிச்சயமாக படத்தில் நிறைய லாஜிக் இல்லாமல் இருந்திருக்கும்.
ஆகவே இந்தப் படம் விஜய்க்கு ஒரு வெற்றிப் படமாக அமையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.