திருவிழா போல ஆரம்பிக்கப் போகும் பிக் பாஸ் சீசன் 6 அறிவிப்பு தேதி.. களத்தில் குதித்த கமல்

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிவரை அந்த வீட்டில் யார் தாக்கப்பிடுகிறார்கள் அவர்களே வெற்றியாளர்கள் என தேடுக்கப்படுகிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட மூன்று மாதம் ஒளிபரப்பாகும்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரப்போகிறது என்றாலே மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் பீதியில் இருக்கும். ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது டிஆர்பியில் விஜய் டிவி தான் முதலிடத்தில் இருக்கும். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சீசனும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத புதிய போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. இதனால் சர்ச்சைக்கும் சண்டைக்கும் பஞ்சமே இருக்காது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கமலஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் உலகநாயகன் கமலஹாசன் தற்போது பல படங்களை தயாரிப்பது மற்றும் நடிப்பது என சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கயுள்ளார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

அதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவாரா அல்லது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே சிம்பு தான் இந்நிகழ்ச்சியின் தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வி எழுந்துள்ளது. எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த சீசனில் வர உள்ளது.