அந்த நடிகையுடன் அனிருத்துக்கு திருமணமா.? அதிர்ச்சியில் உறைந்த மொத்த கோடம்பாக்கம்

தமிழில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் இசை அமைத்து ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகிறார். இதனிடையே இவருக்கும் பிரபல நடிகைக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 3 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அந்த படத்தில் கொலைவெறி பாடலுக்கு பின் ரசிகர்களின் பேராதரவை பெற்று இன்று உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

மேலும் இசையைத் தாண்டி இவருக்கு பல சர்ச்சைக்குரிய காதல் சம்பந்தமான விஷயங்களிலும் ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே . சில வருடங்களுக்கு முன்பு நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவை காதலித்ததாகவும் , பின்னர் இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணம் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே அனிருத்தின் இசை அமைத்த பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது, அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இதனிடையே கீர்த்தி சுரேஷ், அனிருத்தை திருமணம் செய்து கொள்வார் என்ற தகவல் தற்போது வைரல் ஆகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அனிருத்தின் தரப்பிலும் சரி, கீர்த்தி சுரேஷின் தரப்பிலும் அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை. ஆனால் ரசிகர்கள் தற்போது இவர்கள் இருவரின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் புக் செய்த திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →