வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

100 கோடி வசூல் ராஜா உடன் மோதும் கார்த்தி.. விருமன் ரிலீஸ் எப்போது தெரியுமா?

கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். மேலும் முதல்முறையாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர் கதாநாயகியாக விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

விருமன் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஞ்சா பூ கண்ணாலே என்ற மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் கார்த்தியின் நடிப்பு பலராலும் பாராட்டப்படும்.

அந்த வகையில் விருமன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விருமன் படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது விஜய், அஜித் படங்களுக்கு இணையான வரவேற்பு தற்போது சிவகார்த்திகேயன் படங்களுக்கும் கிடைக்கிறது.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் என அடுத்தடுத்த படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் எஸ் கே 20 படத்தில் நடித்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் சத்யராஜ் இணைந்துள்ளார். இப்படத்தை அனூதிப் இயக்குகிறார். இந்நிலையில் எஸ் கே 20 படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் ஒரே நாளில் வெளியாகும் விருமன் மற்றும் எஸ் கே 20 படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது.

Trending News